தென்காசி:
கடையம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் கடையம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கடையம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக பாண்டியன், செயலாளராக பூமிநாத், பொருளாளராக முகமது உசேன் மற்றும் பல புதிய நிர்வாகிகள் அந்தந்த பதவி இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கடையம் பகுதிகளில் இருந்து அண்டை மாநி லங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பதவிகளை ஊராட்சி தலைவர்கள் நியமிக்க அனுமதிக்க வேண்டும்.
கடையம் யூனியன் கூட்டத்தை விரைவாக நடத்தி, நிதிகளை அனைத்து ஊராட்சிகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.