நெல்லை:
புளியங்குடி நடு கருப்பழகு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கிருஷ்ணனை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கேரளா லாட்டரி சீட்டுகள் இருந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.500-ஐ பறிமுதல் செய்தனர்.