மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தென்காசியில் பள்ளி செல்லாத மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் அவர்களது தொழிலில் உதவிக்காக பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்தனர்.

தென்காசி:

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் அவர்களது தொழிலில் உதவிக்காக பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற நரிக்குறவ மாணவர்களின் பெற்றோர்களை, ஆசிரியர், பயிற்றுநர்கள், குழுவாக சென்று நேரடியாக சந்தித்து கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன் பின்னர் 2 குடும்பங்களை சேர்ந்த 5 மாணவர்கள் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் மற்றும் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சீவலமுத்து ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர்.

சேர்க்கைக்காக வட்டார கல்வி அலுவலர்கள் சண்முக சுந்தர பாண்டியன் மற்றும் இளமுருகன் ஆகியோர் ஆவண  செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தென்காசி வட்டார மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பார்வதி ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகலட்சுமி ஒருங்கிணைத்தார். மாணவர்களுக்கு மதிய உணவு, புத்தகம் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.