கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே மினி வேன் கண்ணாடி உடைப்பு-தொழிலாளி கைது

ஆலங்குளம் அருகே மினி வேன் கண்ணாடியை உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தில் தனியார் மில் செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக அந்த ஆலைக்கு சொந்தமான வாகனம் ஒன்று புறப்பட்டு சென்றது. மினி வேனை நெல்லையை சேர்ந்த ஆபிரகாம் (வயது40) என்பவர் ஓட்டி சென்றார்.

ஆலங்குளத்தை அடுத்த கரும்பனூர் அருகே மினி வேன் சென்ற போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் ஒருவர் அந்த மினி வேனின் கண்ணாடி மீது கல்லை வீசி விட்டு தப்பியோடினார். இதில் மினி வேனின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. இது தொடர்பாக ஆபிரகாம் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

விசாரணையில் கண்ணாடியை உடைத்தது ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்த சவுந்தர் (44) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கல்வீசியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT