கோப்புப்படம். 
உள்ளூர் செய்திகள்

இலத்தூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் விஷம் குடித்து சாவு

இலத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை:

தென்காசியை அடுத்த இலத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 57). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். 

கடந்த 12-ந்தேதி கணேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கரையான் மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கணேசன் பணிக்கு சரிவர  செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி அவரை கண்டித்ததாக தெரிகிறது. 

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.