மீட்கப்பட்ட பணத்தை சைபர் கிரைம் போலீசார் உரியவரிடம் ஒப்படைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் வாட்ஸ்-அப் மூலம் மோசடி செய்யப்பட்ட பணம் மீட்பு

சங்கரன்கோவிலில் வாட்ஸ்-அப் மூலம் பூஜை பொருள் விற்பனையாளரிடம் மோசடி செய்யப்பட்ட பணம் மீட்கப்பட்டது.

மாலை மலர்

தென்காசி:

சங்கரன்கோவில் புது மனை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பூஜை பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் பூஜை பொருட்களை மலிவான விலையில் பெறு வதற்கான  ஓர் வழிமுறையை அவரது  செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் பூஜை பொருட்கள் தொடர்ச் சியாக தேடி வந்துள்ளார்.

பின்பு அவரது  வாட்ஸ்- அப்-க்கு தெரியாத எண்ணி லிருந்து ஒருவர் அவர் தேடிய ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருளை ரூ.15 ஆயிரத்திற்கு தருவதாக கூறி முன்பணம் ரூ.5,000 கட்டுமாறு கூறியுள்ளனர்.

கணேசன் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரூ.5 ஆயிரம் பணத்தை ‘கூகுள் பே’  மூலம்  கடந்த ஜனவரி மாதம் அனுப்பி உள்ளார்.  சிறிது நாட்களுக்கு பிறகு தான் மோசடி கும்பலால் அவர் ஏமாற்றப்பட்டார் என தெரியவந்தது.

இதுகுறித்து கணேசன் கடந்த 18-ந்தேதி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன்  தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி  மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் (தொலைத்தொடர்பு) செண்பக பிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.