வீ.கே.புதூர்:
கீழப்பாவூர் வட்டாரம், ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு சார்பில் ஊட்டசத்து விழிப்புணர்வு உணவு திருவிழா மற்றும் போட்டிகள் கழுநீர்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊராட்சிமன்ற தலைவர் கை.முருகன் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டார இயக்க மேலாளர் மாலதி, ஒருங்கிணைப்பாளர் குமுதவள்ளி, செவிலியர் சித்ராஜோதி, பணிதர சமுதாய குழு பயிற்றுனர் வெள்ளதுரைச்சி, சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பூயூலா மெர்சி மற்றும் 20-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு வகையான சத்தாண உணவினை எடுத்து வந்து, போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சிறந்த உணவு தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல்பரிசு ரூ.500 நேதாஜி குழுவிற்கும், 2-வது பரிசு ரூ.400 பசும்பொன் குழுவிற்கும், 3-வது பரிசு ரூ.300 துளசி குழுவிற்கும் ஊராட்சி மன்ற தலைவர் கை. முருகன் வழங்கினார்.
மேலும் போட்டியில் கலந்து கொண்டு அனைத்து மகளிர் குழுவினருக்கும் ஆறுதல் பரிசாக தலா ரூ.200 வழங்கப்பட்டது. இந்த உணவுத் திருவிழாவில் பெண்கள் அதிகளவில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.