கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

காதலை கைவிட மறுத்த பட்டதாரி பெண்ணை வெட்டிய தந்தை

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவூரில் காதலித்த வாலிபரை தான் திருமணம் செய்வேன் என்று கூறிய மகளை அரிவாளால் தந்தை வெட்டினார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆரியங்காவூர் சுடலைமாட சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (வயது51).

 இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதில் மகள் சுதா (20)என்பவர் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் வீட்டிலிருந்து பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவர் அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் தனது தந்தையுடன் சுதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

காதலித்த வாலிபரை திருமணம் செய்து கொள் வேன் என்று சுதா அடம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனால்  ஆத்திரமடைந்த வேல்சாமி வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகள் என்றும் பாராமல் சுதாவின் தலையில் பலமாக வெட்டியுள்ளார்.