கருத்தரங்கு நடைபெற்ற போது எடுத்தப்படம். 
உள்ளூர் செய்திகள்

எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கு

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் தங்கப்பழம் தலைமை தாங்கினார். தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழ்வீரன் மாணவர்களுக்கு தொழில் முனைவோருக்கான கருத்துக்களை வழங்கினார்.

தமிழக அரசின் தன்னாட்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சைலஸ் சற்குணம், கள ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி மாணவர்களுக்கு தேவையான தொழில் சம்பந்தமான கருத்துக்கள் மற்றும் புதிய முயற்சிகள் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஸ்ரீராம், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.