சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மெத்தைகளை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார். 
உள்ளூர் செய்திகள்

சுரண்டை நகர தி.மு.க. சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மெத்தைகள்-சிவபத்மநாதன் வழங்கினார்

சுரண்டையில் நகர தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மெத்தைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுரண்டை:

சுரண்டையில் நகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது. சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.  

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார். தொடர்ந்து நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். மேலும் அங்கன்வாடி மையத்திற்கு 25 இருக்கைகளை வழங்கினார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 5 மெத்தைகளை வழங்கினார்.மேலும் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை,ஏ.பி.அருள், ஆறுமுகச்சாமி,பூல் பாண்டியன், என்.எஸ்.சுப்பிரமணியன்,சங்கர நயினார், ஒப்பந்த குழு உறுப்பினர் பரமசிவம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT