சங்கரன்கோவில்:
நெல்லை மாவட்ட வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையின்பேரில் சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் சமரச தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமரச மையம் மூலம் ஏராளமான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பேரில் சமரச தீர்வு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சார்பு நீதிபதி சந்திரசேகர், குற்றவியல் நீதித்துறை நடுவர் வரதராஜன் ஆகியோர் சங்கரன்கோவில் நீதிமன்றம் அருகில் பஸ் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.