தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய அளவில் குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பழனிநாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதன்படி மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 41 ஆயிரத்து 943 சிறுவர்-சிறுமிகள் பயன்பெறும் வகையில் குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தொடங்கி வைத்தார்.