சுரண்டை:
ஆலங்குளம் ம.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மருதச்சாமி பாண்டியன் தென்காசி கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சுரண்டையில் இருந்து கீழக்கலங்கல் செல்லும் சாலையில் குறிச்சான்பட்டி கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் ஓரத்தில் பெரிய ஒரு ஆலமரம் உள்ளது. அந்த மரத்தின் வழியாக உயர்மின் அழுத்த மின் கம்பி இணைப்பு செல்கிறது.
மரம் அதிகமாக வளர்ந்து மேலே மரத்தை மின்கம்பி உரசிய படி அபாயகரமாக உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ எனறு பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.