தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் கடைகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், இருப்பு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து விற்பனையாளர்களும் உர மூடைகளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
உரம் பற்றாக்குறை மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட உரம் விற்பனை தொடர்பான புகார்களை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்கள் 04633-295430, 04633 - 210269 மற்றும் 9789704418 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தென்காசி கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.