தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி. 
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை கோவிலில் தேரோட்டம் ரத்து

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

செங்கோட்டை:

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேரோட்டம் நடக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த 31-ந்தேதி திருத்தேரை தூய்மைப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்தது.

ஆனால் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக  தேரோட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இன்று விநாயகர், முருகன் கோரத்திலும், சுவாமி அம்பாள் தனித்தேரிலும் எழுந்தருளும் திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

தொடர்ந்து 2 ஆண்டுகளாக பழமை வாய்ந்த திருத்தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT