கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம்

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் நடைபெற்றது.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்டத் திலுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து வரும் இன்று முதல் வாக் காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கபட உள்ளது.  

விடுபட்ட வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பானது வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி அருகே வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.