வீ. கே. புதூர்:
பாவூர்சத்திரம்- சுரண்டை சாலையில் தனியார் பீடி கடை அமைந்துள்ளது. இங்கு கீழப்பாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக தரமான இலைகள் வழங்காததாக கூறி, கடை முன்பு பீடி சுற்றும் பெண்கள் திடீரென திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பீடி கம்பெனி நிர்வாகத்தினரிடம் பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் வரும் நாட்களில் தரமான பீடி இலை வழங்கப்படும் என்று நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.