விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவில் காளியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மாலை மலர்

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் அமைந்துள்ளது காளியம்மன் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந்தேதி கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 29-ந்தேதி காலை பால்குடம் வீதி உலா, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் பொங்கலிடும் நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு மேல் 22 பக்தர்கள் பூக்குழி இறங் கினர்.

 பங்குனி கோவில் கொடை விழா மற்றும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.