கலெக்டர் கோபாலசுந்தரராஜ். 
உள்ளூர் செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்- தென்காசி கலெக்டர் தகவல்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தென்காசி கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில், 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் மூலம் கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

 2021-22 ஆம் ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் 10,130 தொழிலாளர்கள் நல வாரியங்களில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2,211 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.33 லட்சத்து 73 ஆயிரத்து 950 உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 1083 தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் உறுப்பினராக சேருவதற்கும், உறுப்பினர்கள் உதவி தொகை பெறுவதற்கும் https://tnuwwb.tn.gov.in/  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இந்த தகவலை, தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT