சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வள்ளலார் தெருவில் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரி சம்பவத்தன்று கோவிலை திறக்க முயற்சி செய்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கோவில் அம்மனின் கழுத்தில் இருந்த தங்க தாலி, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி அப்ரானந்தம் சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.