கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் கடையில் கொள்ளை முயற்சி

சங்கரன்கோவில் அருகே பிளாஸ்டிக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

மாலை மலர்

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சி குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 27). இவர் சங்கரன்கோவில் புதிய பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு மறுநாள் கடையை திறக்க வரும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்து கொள்ளை முயற்சி நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.