சிவகிரியில், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு

சிவகிரியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாலை மலர்

சிவகிரி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்பேரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமையில், சிவகிரி வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் கண் கூசும் அளவில் பிரகாசமான ஒளியுடன் வருகின்ற வாகனங்களில் விளக்குகளின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

18 வயது பூர்த்தி அடையாமல் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிறுவர்களை பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது எனவும், மீறி வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறைகளை வலியுறுத்தி, பஸ் நிலையம் முன்பாகவும், பேரூராட்சி அலுவலகம் முன்பாக வைத்தும்  பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் லட்சுமி ராமன், சிவகிரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோனை, கவுன்சிலர் செந்தில்வேல், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.