மோசடியாக பதிவு செய்த நிலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தென்காசியில் ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்கப்பட்ட நிலம் மீட்பு

தென்காசி மாவட்டத்தில் ஆள்மாறாட்டம் செய்து 52 சென்ட் நிலத்தை அபகரித்தவர்களிடம் இருந்து அந்த நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்டம், வடக்கு பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். 

இவர் தனக்கு சொந்தமான 52 சென்ட் இடத்தை சீனிப்பாண்டி மற்றும் வேலுசாமி என்பவர்கள் மோசடி செய்ததாகவும் தனது நிலத்தை மீட்டுத் தரும்படியும் கடந்த ஜனவரி மாதம் 20&ந்தேதி தென்காசி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். 

இது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டு இன்ஸ்பெக்டர் சாந்தி செல்வி அந்த புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டதில் அபகரிக்கப்பட்ட நிலமானது காளியப்பன் என்பவருக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்டது என்பது தெரியவந்தது.

எனவே அவருக்குப் பின் அவருடைய வாரிசான  அனுராதா வள்ளியம்மாள் என்பவருக்கு பாத்தியப்பட்டது எனவும், சீனிப்பாண்டி என்பவர் காளியப்பன் போல் ஆள் மாறாட்டம் செய்து அவருடைய மருமகனான வேலுச்சாமி என்பவருக்கு போலியான ஆவணம் தயார் செய்து கிரையம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்பு எதிர் மனுதாரர்கள் மோசடியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்யபட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்  முன்னிலையில்  உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்  பாராட்டினார்