தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் என்.சி.சி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 
உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்த என்.சி.சி மாணவர்கள்

தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தை என்.சி.சி. மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்ட செயல்பாடுகளின்படி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் மருத்துவமனை வளாகத்திலுள்ள பொதுக்கழிவுகளான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் தென்காசி ஐ.சி.ஐ  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி   என்.சி.சி  மாணவர்கள் சுமார் 25 பேர்  கலந்து கொண்டு, மருத்துவமனை வளாகத்தினை  சுத்தம் செய்தனர் . 

இப்பணியை செவிலியர் கண்காணிப்பாளர் வசந்தி  மேற்பார்வையிட்டார். ஏற்பாடுகளை  தென்காசி ஐ.சி.ஐ  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் அனுமதியுடன்,  தேசிய மாணவர் படை அலுவலர்  அந்தோணி சுரேஷ்  மற்றும் ஓவிய ஆசிரியர் வேல் முருகன்ஆகியோர் செய்திருந்தனர் . 

மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் என்.சி.சி  மாணவர்களின் சேவை மனப்பான்மையை பாராட்டியதோடு தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதன்  அவசியத்தை பற்றி விளக்கி கூறினார். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தினை சுத்தம் செய்ய உதவிய ஆசிரியர்கள் மற்றும் என்.சி.சி மாணவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உறைவிட மருத்துவர் ராஜேஷ் நன்றி  தெரிவித்தார் .