செங்கோட்டை:
செங்கோட்டை பகுதியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும்.
இங்குள்ள வாஞ்சிநாதன் சிலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் போதுமானதாக இல்லை. இரவு நேரங்களில் இருளாகவே காட்சி அளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் இரவு நேரங்களில் பிரதான சாலையை கடப்பது பெரும் சவாலாக இருந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் உயர்மின்கோபுரம் அமைக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சமின்றி அந்த வழியாக சென்று வந்தனர். தற்போது அந்த உயர்மின்கோபுரத்தில் உள்ள ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது.
இதன் காரணமாக இருட்டை பயன்படுத்தி மர்மநபர்கள் வாகன ஓட்டிகளிடம் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது, வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்குவது உள்ளிட்டவை நிகழ்ந்து விடுகிறது என அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
எனவே மக்கள் நலன் கருதி உயர்மின்கோபுரத்தில் உள்ள விளக்குகளை உடனடியாக கழட்டிவிட்டு புதிய விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.