தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவால யங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவிபெற, கிறிஸ்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை& III) அளிக்க வேண்டும்.
சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதிஉதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதிஉதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தை சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நகர், தென்காசி - 627 811 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
இத்தகவல் தென்காசி கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.