விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி 
உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கடன் விழிப்புணர்வு முகாம்

செங்கோட்டையில் பயிர்கடன் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின்பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின்படி செங்கோட்டை வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் சிறப்பு முகாம்கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் நடைபெறுகிறது. செங்கோட்டை புதூரில் பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு கிசான் கிரிடிட் கார்டு  பயிர் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் கலந்துகொண்டு பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் எவ்வாறு விவசாயிகள் கடன் அட்டை பெறுவது என்பது பற்றி அதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றியும் விளக்கி கூறி விண்ணப்பங்களை விவசாயிக்கு வழங்கினார்.  பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விவசாயிகளிடம் அவர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புளியரை உதவி வேளாண்மை அலுவலர் முகமது ஜலால் மைதீன் செய்திருந்தார் பயிர் காப்பீடு திட்ட நிறுவனத்தின் களப்பணியாளர் சாகுல் மீரான் நன்றி கூறினார். 

 நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதி காளி உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.