சங்கரன்கோவிலில் துணை சுகாதார நிலையம் அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் துணை சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை

சங்கரன்கோவிலில் துணை சுகாதார நிலையம் அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மக்களின் நலன் கருதி ரூ.25 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதில் முதல் கட்டமாக கழுகுமலை ரோட்டில் அமைந்துள்ள காவேரி நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.

ஆணையாளர் ஜெயப்பிரியா முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி சரவணன், ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, அலமேலு, செல்வராஜ், உமாசங்கர், வேல்ராஜ், ஷேக் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT