கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

சுரண்டையில் குளத்தில் மூழ்கி பெண் பலி

சுரண்டையில் குளத்தில் விழுந்து சேகர் என்பவரின் மனைவி திரவியம் என்ற பெண் உயிரிழந்தார்.

மாலை மலர்

நெல்லை:

சுரண்டை அருகே உள்ள கரையாளனூர் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி திரவியம்(வயது 47).

இவர் சாம்பவர்வடகரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்றுகாலை சுரண்டை பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு பணம் கட்டுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது தனது மகன் சுரேசை அழைத்து சென் றுள்ளார். அங்கு கூட்டமாக இருந்த காரணத்தினால் சுரேசை வீட்டுக்கு அனுப்பி வைத்துள் ளார்.

இந்நிலையில் வெகு நேரமாகியும் திரவியம் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தேடிப்பார்த்தனர். 

இதற்கிடையே சுரண்டை ரெட்டைகுளத்தில் ஒரு பெண்ணின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தனர். 

அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில், அந்த பெண் திரவியம் என்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். 

திரவியம் எதற்காக ரெட்டை குளத்திற்கு வந்தார்? குளிப்பதற்காக வந்தபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.