சாலைகளை நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் சேதமடைந்த பேவர் பிளாக் சாலைகளை நகராட்சி சேர்மன் ஆய்வு

சங்கரன்கோவில் பகுதியில் சேதமடைந்த பேவர் பிளாக் சாலைகளை நகராட்சி சேர்மன் உமாமகேஷ்வரி ஆய்வு செய்தார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் வகையில் புதிய குழாய்கள் அமைக்கப்படும் பணி முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் புதிய குடிநீர் குழாய் இணைக்கும் பணிக்காக பேவர் பிளாக் சாலைகள் தோண்டப்பட்டதால் சங்கரன் கோவில் நகராட்சி பகுதிகளில் தோண்டப்பட்ட பேவர் பிளாக் சாலைகளைமீண்டும் சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரியிடம் மனு அளித்தனர். 

அதனைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்ட நிலையில் தோண்டப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை உடனே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். 

இந்நிலையில் சங்கரன் கோவில் நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் சேதமடைந்த பேவர் பிளாக் சாலைகளை நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ஜெயசெல்வி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தோண்டப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை சரி செய்ய வலியுறுத்தினார். 

இதனை தொடர்ந்து பேவர் பிளாக் சாலைகளை மீண்டும் சரி செய்ய உடனடி  நடவடிக்கை எடுக்க படும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட இளைஞரணி சரவணன், நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜாஆறுமுகம், ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், தி.மு.க. மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்துமணிகண்டன், வக்கீல் ராம்குமார், காவல்கிளி, குமார், ஜலால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.