உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அண்டமி ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30) . கட்டிட தொழிலாளி.

இவர் அண்டமியில் இருந்து மதுக்கூருக்கு கட்டுமானம் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது மதுக்கூர் அருகே தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது.

இதில் நிலைதடுமாறிய சந்தோஷ்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.