வாலிபர் கைது 
உள்ளூர் செய்திகள்

பேச்சிப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கேலி செய்த வாலிபர் கைது

பேச்சிப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கேலி கிண்டல் செய்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

குழித்துறை:

குழித்துறையை அடுத்த காயல்ரோட்டை சேர்ந்தவர் சுபின் (வயது25), இவர் அந்த பகுதியில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவரை கேலி- கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் சுபின் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்த மாணவி பள்ளிக்கு செல்ல தயங்கினார். சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது மாணவி அவரை சுபின் கேலி செய்து ஆபாசமாக பேசியது குறித்து கூறினார்.

இதுபற்றி மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுபினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.