கைது 
உள்ளூர் செய்திகள்

அடையாறு சாஸ்திரி நகரில் பெண்ணிடம் செயின் பறித்த பட்டதாரி வாலிபர் கைது

சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை:

சென்னை பெசன்ட் நகர் 22-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருத்திகா. இவரிடம் கடந்த 25-ந்தேதி 4 ½ பவுன் செயின் பறிக்கப்பட்டது.

இதுபற்றி சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி நெய்வேலியை சேர்ந்த திவாகர் என்ற வாலிபரை கைது செய்தனர்.

நெய்வேலியைச் சேர்ந்த திவாகர் பட்டதாரி ஆவார். டிப்ளமோ படித்துவிட்டு உணவகம் ஒன்று நடத்தியுள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் சென்னைக்கு வந்த அவர் பெருங்குடியில் நண்பர்களோடு தங்கியுள்ளார். நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மெரினா கடற்கரையில் அமர்ந்து யோசனை செய்த போதுதான் திருடுவது என திட்டம் போட்டுள்ளார்.

இதன்படி செயின் பறிப்பில் ஈடுபட்ட அவரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT