புகார் 
உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

ஆம்பூர் அருகே இளம்பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அப்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

மாலை மலர்

ஆம்பூர்:

ஆம்பூர் சாமியார் மடம் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவர் தனியார் மருந்து கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (26), இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நந்தினி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை நந்தினி தூக்கில் பிணமாக தொங்கினார்.

ஆம்பூர் டவுன் போலீசார் நந்தினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நந்தினியின் தந்தை முரளி தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்தினிக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆவதால் வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.