மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி காயம் 
உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி காயம்

சென்னை அருகே மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாத்திரி (வயது 45). கொத்தனார் வேலை செய்து வரும் இவர் நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டின் 2வது மாடி பால்கனியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்