பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து எர்ணாவூர் பாரத் நகர் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவொற்றியூர் எண்ணூர் பகுதி குழு தலைவர் செல்வகுமாரி மாவட்ட செயலாளர் பாக்கியம் ஆகியோர் தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதை பாடையில் ஏற்றி ஒப்பாரி வைத்து கோஷங்கள் எழுப்பினர்.