சென்னை:
அமைந்தகரை சட்டம்-ஒழுங்கு போலீசில் பணிபுரிந்து வருபவர் முகமது ஜாவீத். இவரது மனைவி சுகுணா. வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் பணியாற்றி வருகிறார். ஜாவித்தும், சுகுணாவும் காதலித்து திருமணம் செய்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் பட்டினப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சுகுணா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்ட அவரது கணவர் ஜாவித் சுகுணாவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.