தீயில் கருகி கிடைக்கும் மோட்டார் சைக்கிள் 
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள தெளி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி மகன் சிவக்குமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். அப்போது இரவு 11.30 மணியளவில் திடீரென அவரது மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து சிவக்குமாரிடம் கூறினர். உடனே அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் மோட்டார் சைக்கிளின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. யாரோ மர்ம நபர்கள், அந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொழுத்தியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவக்குமார், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.