பள்ளி மாணவி கடத்தல் 
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி கடத்தல்

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள கொங்கம்பட்டு பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவி, புதுச்சேரி மாநிலம் மடுகரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தில் விழுப்புரம் அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வீரப்பன் மகன் கார்த்திகேயன் (25) என்பவர் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த அம்மாணவியை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை கார்த்திகேயன், அவரது நண்பரான மடுகரையை சேர்ந்த விமல்ராஜ் என்பவரின் உதவியுடன் கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற கார்த்திகேயன், விமல்ராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.