கே.பி.அன்பழகனின் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

கே.பி.அன்பழகனின் வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலும் சோதனை

கே.பி.அன்பழகனின் வீட்டில் சோதனை நடைபெற்றதையொட்டி ஏ.டி.எஸ்.பி. அண்ணாமலை தலைமையில் பாலக்கோடு டி.எஸ்.பி. தினகரன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோட அள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்தது.

அப்போது கே.பி.அன்பழகனின் வீட்டில் படுக்கையறை, வீட்டின் முன்புறம் இருந்த அலுவலகம், வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும் வீட்டின் மாடியில் இருந்த அறைகள், தண்ணீர் தொட்டி, சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கே.பி.அன்பழகனின் வீட்டில் சோதனை நடைபெற்றதையொட்டி ஏ.டி.எஸ்.பி. அண்ணாமலை தலைமையில் பாலக்கோடு டி.எஸ்.பி. தினகரன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.