கைது 
உள்ளூர் செய்திகள்

வருசநாடு அருகே பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோவில் கைது

வருசநாடு அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வருசநாடு:

தேனி மாவட்டம் வருசநாடு அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த அய்யனார் மகன் அஜித்குமார் (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்1 மாணவியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கடத்திச் சென்று தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனிடையே தங்களது மகளை காணாமல் பல இடங்களில் தேடிப்பார்த்த மாணவியின் பெற்றோர் வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் தேனியில் பதுங்கி இருப்பதுதெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்று அஜித்குமாரையும் மாணவியையும் மீட்டு வந்தனர்.

அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மாணவியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.