மாநில தேர்தல் ஆணையம் 
உள்ளூர் செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 16-ந்தேதி வரை 670 புகார்கள் மீது நடவடிக்கை- தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்வரை இப்புகார் மையம் தொடர்ந்து இயங்கும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புகார் மையத்தில், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுவர் விளம்பரம், வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், மாதிரி நடத்தை விதிகள், வேட்பு மனு தாக்கல், சின்னம் ஒதுக்கீடு, தேர்தல் விதி மீறல் தொடர்பாக 670 புகார்கள் 16-ந்தேதி வரை வரப்பெற்றுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, உரிய விளக்கங்கள், தகவல்கள் மற்றும் தெளிவுரைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட்டு வருகின்றன.

விதி மீறல்கள் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம். தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும்வரை இப்புகார் மையம் தொடர்ந்து இயங்கும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்...உக்ரைன் கிழக்கு பகுதியில் 29 முறை குண்டுவீசி தாக்குதல்- பதட்டம் அதிகரிப்பு