உள்ளூர் செய்திகள்

உப்பிலியபுரம் பகுதியில் நேற்றிரவு கனமழை

உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பகல் வேளையில் சுட்டெரித்த வெயில்.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பகல் வேளையில் சுட்டெரித்த வெயில், மாலையில் சில்லென்ற குளிர் காற்று வீசியதன் பேரில், இரவு முழுக்க, விடிய விடிய கன மழை பொழிந்தது. இதனையடுத்து புளியஞ்சோலைக்கு வரும் அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதியிலுள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவது குறிப்பிடதக்கது.