உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவரது மகன் முஜாஹிதீன் (வயது 30), கூலி தொழிலாளி.
இவர் பல இடங்களில் கூலி வேலை செய்து பணம் சேர்த்து வைத்திருந்தார். இவரிடம் பலர் பணத்தை கடன் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முஜாஹிதீன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தகவலின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முஜாஹிதீன் தான் யார்-யாருக்கு எல்லாம் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என்பதை ஒரு கடிதத்தில் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.