கைது 
உள்ளூர் செய்திகள்

மெரினாவில் கொலை- 2 பேர் கைது

மெரினாவில் பச்சையப்பன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

சென்னை:

மெரினா கடற்கரை சாலை கண்ணகி சிலை அருகில் நேற்று திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் சிலர் பச்சையப்பனை அடித்து கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய திருப்பத்தூரைச் சேர்ந்த ஜமீல் அகமது, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சுஜி ஆகிய 2 பேரை மெரினா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT