கைது 
உள்ளூர் செய்திகள்

செஞ்சியில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது

செஞ்சியில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் செஞ்சி நகர கடைவீதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கடைவீதியில் வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்ற வளத்தியை சேர்ந்த தர்மன், மணலப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரூ.150 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.