டி.டி.வி.தினகரன் 
உள்ளூர் செய்திகள்

ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க. அரசு ஆரம்பித்து இருப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க. அரசு ஆரம்பித்து இருக்கிறது. சாமானிய மக்கள் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.