உள்ளூர் செய்திகள்

பொத்தேரி ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற மாணவி மீது சென்னையில் இருந்து சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் உரசியது.தூக்கி வீசப்பட்ட மாணவி கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Suresh K Jangir

வண்டலூர்:

பெருங்களத்தூர், திருவள்ளுவர் நகர், 3-வது குறுக்குத்தெவை சேர்ந்தவர் கிருத்திகா (வயது20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலை அவர் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பொத்தேரி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் அங்குள்ள நடைமேடை மேம்பால படிக்கட்டை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, சென்னையில் இருந்துசென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மாணவி மீது உரசியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான மாணவி கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.