மீனவர்கள் சிறைபிடிப்பு 
உள்ளூர் செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 தமிழக மீனவர்கள் கைது -இலங்கை கடற்படை நடவடிக்கை

இந்திய - இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

ராமேஸ்வரம்:

தமிழக மீனவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லை பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

சில நாட்களில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது விசைப்படகுகள் மட்டும் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் தமிழக மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.