தயாளு அம்மாள் 
உள்ளூர் செய்திகள்

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

தயாளு அம்மாள் ஆயிரம் விலக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது..

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வரும் அவர் தற்போது ஆயிரம் விலக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT